unfoldingWord 46 - பவுல் கிருஸ்தவனாய் மாறுதல்
абрис: Acts 8:1-3; 9:1-31; 11:19-26; 13-14
Номер сценарію: 1246
Мову: Tamil
Аудиторія: General
Мета: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
Статус: Approved
Сценарії є основними вказівками для перекладу та запису на інші мови. Їх слід адаптувати, якщо це необхідно, щоб зробити їх зрозумілими та відповідними для кожної окремої культури та мови. Деякі терміни та поняття, які використовуються, можуть потребувати додаткових пояснень або навіть бути замінені чи повністю опущені.
Текст сценарію
சவுல் என்று ஒருவன் இருந்தான். அவன் இயேசுவை நம்பாதவன். இவன் வாலிபனாய் இருக்கும் போது, ஸ்தேவானை கொலை செய்தவர்களோடு இருந்தவன். அதன் பின்பு விசுவாசிகளைத் துன்புறுத்தினான். இவன் எருசலேமில் வீடுகள் தோறும் சென்று, ஆண்களையும் பெண்களையும் பிடித்து சிறையில் போடும் படிக்கு, பிரதான ஆசாரியரால் கொடுக்கப்பட்ட அதிகாரத்தினால் தமஸ்குவிற்கு சென்று அங்கே இருக்கும் கிறிஸ்தவர்களைப் பிடித்து, எருசலேமுக்கு கொண்டு வரும்படி அனுப்பபட்டிருந்தான்.
எனவே சவுல் தமஸ்குற்கு சமீபமாய் போகும் வழியில், வானத்திலிருந்து ஒரு வெளிச்சம் அவனைச் சுற்றி தோன்றிற்று. உடனே சவுல் கீழே விழுந்தான். உடனே ஒரு சத்தம் உண்டாகி, சவுலே! சவுலே! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? என்றது. அதற்கு சவுல், ஆண்டவரே நீர் யார்? என்று கேட்டான். இயேசு அவனிடத்தில். நீ துன்பபடுத்துகிற இயேசு நானே என்று பதில் சொன்னார்.
சவுல் எழுந்தபோது, அவனால் பார்க்க முடியவில்லை. அவனுடைய நண்பர்கள் அவனை தமஸ்குவிற்கு கொண்டு போனார்கள். அங்கே சவுல் மூன்று நாட்கள் எதையும் சாப்பிடாமலும், ஒன்றும் குடிக்காமலும் இருந்தான்.
தமஸ்குவில் ஒரு தீர்கத்தரிசி இருந்தான் அவன் பெயர் அனனியா. தேவன் அவனிடத்தில் சவுல் இருக்கும் வீட்டிற்குப் போய், அவன்மேல் கைகளை வைத்தால் அவன் மறுபடியும் பார்வையடைவான் என்று சொன்னார். ஆனால் அனனியா, ஆண்டவரே, இந்த மனிதன் விசுவாசிகளைத் துன்பப்படுத்துகிறதைக் கேட்டிருக்கிறேன் என்று சொன்னான். பின்பு தேவன் அனனியாவினிடத்தில், நீ போ! நான் அவனை என்னுடைய நாமத்தை யூதர்களுக்கும், மற்ற ஜனங்களுக்கும் சொல்லும்படித் தெரிந்து கொண்டேன். அவன் என் நாமத்தின் நிமித்தம் அநேக பாடுகள் படுவான் என்றார்.
எனவே அனனியா, சவுலை சந்தித்து, நீ வந்த வழியிலே உனக்குத் தோன்றின இயேசு, நீ பார்வையடையும் படிக்கும், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்று சொல்லி அவன் மேல் கையை வைத்தான். உடனே அவன் பார்வையடைந்து, ஸ்நானம் பெற்றான். பின்பு சாப்பிட்டு, பெலனடைந்தான்.
அங்கே தமஸ்குவில், யூதர்களுக்கு தேவனுடைய குமாரனாகிய இயேசுவை பிரசங்கித்தான். சவுல் விசுவாசிகளை கொல்லும்படி போனான், ஆனால் இப்போது இயேசுவை விசுவாசித்தான்! யூதர்கள் ஆச்சரியப்பட்டார்கள். சவுல் யூதர்களோடு வாக்குவாதம் செய்து, இயேசுவை மேசியா என்று அவர்களுக்குச் சொன்னான்.
அநேக நாட்களுக்குப் பின், யூதர்கள் சவுலைக் கொலை செய்யும்படி நினைத்து, நகரத்தின் வாசலில் சிலரை நிறுத்தினார்கள். ஆனால் இந்த செய்தியை சவுல் கேள்விப்பட்டு, அவனுடைய நண்பர்களின் உதவியினால் தப்பித்தான். அதாவது, ஒருநாள் இரவில், நகரத்தின் சுவர்மேலிருந்து ஒருகூடையில் இறக்கி விடப்பட்டு, தமஸ்குவிலிருந்து சவுல் தப்பித்து, தொடர்ந்து இயேசுவைப் பற்றி பிரசங்கித்தான்.
சவுல் எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களை சந்திக்கும்படி போனான், ஆனால் அவர்கள் அவனைப் பார்த்து பயந்தார்கள். பின்பு விசுவாசியாகிய பர்னபா என்பவன் சவுலை அப்போஸ்தலரிடம் கூட்டிக் கொண்டு போனான். அங்கே எப்படி தைரியமாய் பிரசங்கித்தான் என்று சொன்னான் பின்பு அப்போஸ்தலர்கள் சவுலை ஏற்றுக் கொண்டனர்.
எருசலேமில் துன்பப்பட்டதினால், சில விசுவாசிகள் தூர தேசமான அந்தியோகியா என்னும் ஊரில் இயேசுவை பிரசங்கித்தனர். அந்தியோகியாவில் இருந்த அநேகர் யூதர்கள் இல்லை எனவே அங்கே அநேகர் முதலில் விசுவாசிகளானார்கள். அங்கே பவுலும் பர்னபாவும் போய், புதிய விசுவாசிகளுக்கு இயேசுவைப் பற்றி அதிகமாய் போதித்து, சபைகளை பலப்படுத்தினார்கள். அந்தியோகியாவில் இயேசுவை விசுவாசித்தவர்களை தான் முதன் முதலில் கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
ஒருநாள் அந்தியோகியாவில் இருந்த கிறிஸ்தவர்கள்உபவாசித்து ஜெபித்துக் கொண்டிருக்கும் போது பரிசுத்த ஆவியானவர் அவர்களோடு பேசி, சவுலையும், பர்னபாவையும் நான் அவர்கள் செய்யும்படி அழைத்த வேலைக்கு அனுப்பிவிடுங்கள் என்று சொல்லப்பட்டதினால். அந்தியோகியா சபையார், பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஜெபம் செய்து, அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள். பின்பு இயேசுவின் நற்செய்தியை பிரசங்கிக்கும்படி அனுப்பப்பட்டார்கள். சவுலும் பர்னபாவும் இயேசுவை அநேக இடங்களில் பிரசங்கித்ததினால் அங்கே இருக்கும் ஜனங்கள் இயேசுவை விசுவாசித்தார்கள்.