unfoldingWord 49 - தேவனுடைய புதிய உடன்படிக்கை
Outline: Genesis 3; Matthew 13-14; Mark 10:17-31; Luke 2; 10:25-37; 15; John 3:16; Romans 3:21-26, 5:1-11; 2 Corinthians 5:17-21; Colossians 1:13-14; 1 John 1:5-10
Broj skripte: 1249
Jezik: Tamil
Publika: General
Svrha: Evangelism; Teaching
Features: Bible Stories; Paraphrase Scripture
Status: Approved
Skripte su osnovne smernice za prevođenje i snimanje na druge jezike. Treba ih prilagoditi po potrebi kako bi bili razumljivi i relevantni za svaku različitu kulturu i jezik. Neki termini i koncepti koji se koriste možda će trebati dodatno objašnjenje ili čak biti zamenjeni ili potpuno izostavljeni.
Script Tekt
மரியாள் ஒரு கன்னிகையாய் இருக்கும் போது, தேவதூதன் அவளிடத்தில் வந்து, நீ ஒரு குழந்தையைப் பெறுவாய் என்றான். பின்பு அவள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பவதியாகி, ஒரு குழந்தையைப் பெற்றாள். அவருக்கு இயேசு என்று பெயர் வைத்தார்கள். அதினால் இயேசு மனிதனாகவும், தேவனாகவும் இருக்கிறார்.
இயேசு தேவன் என்று காண்பிக்க அநேக அற்புதங்களைச் செய்தார். அதாவது, அவர் தண்ணீரின் மேல் நடந்தார், அநேக வியாதியஸ்தர்களை குணமாக்கினார், பிசாசுகளைத் துரத்தினார், மரித்தவர்களை உயிரோடு எழுப்பினார், மேலும் ஐந்து அப்பங்களையும், இரண்டு சிறு மீன்களையும் வைத்து 5௦௦௦ பேர்கள் திருப்தியாக சாப்பிடும்படி செய்தார்.
இயேசு நல்ல போதகராகவும் இருந்தார். அதாவது, எல்லாவற்றையும் ஜனங்களுக்கு நன்றாய் போதித்தார். இயேசு தேவனுடைய குமரன் என்பதினால் அவர் சொன்ன எல்லாவற்றையும் அவர்கள் செய்யும்படி போதித்தார். உதாரணமாக, தன்னைப் போல மற்றவர்களையும் நேசிக்கும்படி சொன்னார்.
மேலும் அவர் சொன்னது, எல்லாவற்றையும்விட நாம் தேவனை நேசிக்க வேண்டும், நம்முடைய செல்வங்களையும் சேர்த்து தான் சொன்னார்.
இந்த உலகத்தில் இருப்பதை விட தேவனுடைய ராஜ்யத்தில் சேர்வதே நல்லது என்றும், தேவனுடைய ராஜ்யத்தில் சேர்வதற்கு, அவர் நம்முடைய பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதையும் இயேசு சொன்னார்.
இயேசுவை சிலர் ஏற்றுக் கொள்வார்கள், அவர்களை தேவன் இரட்சிப்பார். சிலர் அவரை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று இயேசு சொன்னார். மேலும் அவர், சிலர் இயேசுவின் நற்செய்தியை ஏற்றுக் கொள்வார்கள் அவர்களை தேவன் இரட்சிப்பார். இவர்கள் நல்ல நிலத்திற்கு ஒப்பிடப்படுகிறார்கள். ஆனால் வேறு சிலர் வழியருகே இருக்கும் கெட்ட நிலம் போன்றவர்கள், அவர்கள் தேவனுடைய வார்த்தை, விதையைப் போல வழியருகே விழுந்து, பலன் எதுவும் கொடுக்காது. அதுபோல இவர்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல், தேவனுடைய ராஜ்யத்தை புறக்கணிக்கிறார்கள்.
பாவிகளை தேவன் அதிகமாய் நேசிக்கிறார் என்று இயேசு போதித்தார். அவர்களை தேவன் மன்னித்து, அவருடைய பிள்ளைகளாக மாற்ற விரும்புகிறார்.
தேவன் பாவத்தை வெறுக்கிறார் என்று இயேசு சொன்னார். ஏனெனில் ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தார்கள், அவர்களுடைய சந்ததியார் முழுவதும் பாவம் செய்தார்கள். பின்பு இந்த உலகத்தில் உள்ள எல்லோரும் பாவம் செய்து தேவனுக்கு விரோதிகளாக மாறி, தூரம் போனார்கள்.
ஆனால் தேவன் தம்முடைய ஒரே குமாரனை தந்து, அவரை விசுவாசிக்கிரவர்களை தண்டியாமல், மாறாக என்றென்றைக்கும் அவரோடு வாழும்படிச் செய்து, இப்படி தம்முடைய அன்பை உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் காண்பித்தார்.
நீ பாவம் செய்ததினால், மரிப்பதற்கு பாத்திரவானாய் மாறினாய். தேவன் உன்மேல் கோபமடைவதற்கு அவருக்கு உரிமை உண்டு, ஆனால் அவர் இயேசுவின் மேல் கோபமடைந்து, இயேசுவை தண்டித்து, அவரை சிலுவையில் அறைந்தார்.
இயேசு பாவம் எதுவும் செய்ததில்லை, ஆனாலும் தேவன் அவரைத் தண்டிக்கும்படி ஒப்புக் கொடுத்தார். சாவதற்கும் சம்மதித்தார். உன்னுடைய மற்றும் இவ்வுலகத்தில் இருக்கும் எல்லோருடைய பாவங்களையும் போக்குவதற்கு அவரே சரியான பலி, எல்லோருடைய பாவங்களையும் மேலும் கொரூரமான பாவங்களையும்கூட தேவன் மன்னிகும்படி இயேசு தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்தார்.
நீ தேவனால் இரட்சிக்கபடுவதற்கு எந்த நன்மை செய்தாலும் ஈடாகாது. நாம் தேவனோடு உறவு வைத்துக் கொள்வதற்கு, தேவனுடைய குமாரனாகிய இயேசு சிலுவையில், உன்னுடைய பாவங்களுக்காக, உனக்கு பதிலாக மரித்து, அவரை மறுபடியும் தேவன் உயிரோடு எழுப்பினார் என்று விசுவாசித்தால் தேவன் நீ செய்த பாவங்களை மன்னிப்பார்.
இயேசுவை சொந்த இரட்சகராக யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களை தேவன் இரட்சிக்கிறார். ஆனால் இயேசுவை விசுவாசிக்காதவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் பணக்காரர், ஏழை, ஆண், பெண், சிறியவர், பெரியவர் அல்லது நீ வாழும் இடம் என்று எதுவாயிருந்தாலும் தேவன் இரட்சிப்பதில்லை. தேவன் உன்னை நேசிக்கிறார், நீ இயேசுவை விசுவாசிக்கும் போது, அவர் உன்னுடைய நண்பனாய் இருப்பார்.
அவரை விசுவாசித்து, ஸ்நானம் பெறும்படி இயேசு உன்னை அழைக்கிறார். இயேசுவை மேசியா என்றும் அவரே தேவனுடைய ஒரே குமரன் என்று நீ விசுவாசிக்கிறாயா? நீ பாவி என்றும், தேவன் உன்னை தண்டிப்பதற்கு நீ பாத்திரவான் என்றும் நீ நம்புகிறாயா? உன்னுடைய பாவங்களைப் போக்கும்படி இயேசு சிலுவையில் உனக்காக மரித்தார் என்று நீ விசுவாசிக்கிறாயா?
இயேசு உனக்காக செய்ததை, நீ நம்பினால், நீ கிறிஸ்தவன்! இருளின் அதிகாரியான சாத்தான் உன்னை ஒருபோதும் ஆட்கொள்வதில்லை. இப்போது ஒளியின் ராஜ்யத்தின் அதிகாரியான தேவன் உன்னை நடத்துவார். தேவன் நீ எப்போதும் செய்து கொண்டிருந்தது போல, உன்னை பாவம் செய்யாமல் தடுத்து, நீ போகும்படி சரியான வழியைக் காட்டுவார்.
நீ கிறிஸ்தவனாயிருந்தால், இயேசு உனக்காக எல்லாம் செய்ததினால், தேவன் உன்னுடைய பாவங்களை மன்னித்தார். இப்போது, தேவனுக்கு விரோதியாக அல்ல, நெருங்கிய நண்பனாக உன்னை ஏற்றுக் கொண்டார்.
நீ ஒருவேளை இயேசுவின் நண்பனாகவும் அல்லது இயேசுவின் ஊழியக்காரனாயிருந்தாலும், இயேசு உனக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால் நீ கிருஸ்தவனாயிருந்தாலும் சாத்தான் உன்னை பாவம் செய்யும்படி சோதிப்பான். ஆனால் தேவன் செய்வேன் என்று சொன்னபடியே அவர் எப்போதும் செய்வார். நீ உன்னுடைய பாவங்களை அறிக்கை செய்தால் அவர் மன்னிப்பார். மேலும் அந்த பாவத்தை எதிர்த்து ஜெயிக்கும் பலத்தையும் கொடுப்பார்.
தேவனுடைய வார்த்தையை படித்து, ஜெபிக்கும்படி தேவன் சொல்லுகிறார். மேலும் அவரை மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஆராதிக்கும் படியும் சொல்லுகிறார். அவர் உனக்குச் செய்தவைகளை கண்டிப்பாக மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். இவைகள் எல்லாவற்றையும் நீ செய்யும் போது உன்னால் அவருடைய நல்ல நண்பனாக மாறமுடியும்.